1-mdl.jpg)
இரு அணிகளும் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழை குறுக்கிட்டதால் 36 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 225/3 ரன்களை குவித்தது.
இந்திய அணித்தரப்பில் ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் 74 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 98 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கு வெளியேறி சொதப்ப, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களை குவித்தார்.
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறியது. அந்த அணியில் 4 வீரர்கள் டக் அவுட்டும் 3 பேர் ஒற்றை இலக்க ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் நிகோலஸ் பூரண் (42) - பிராண்டன் கிங் (42) ரன்கள் அமைத்து போராடியபோதும் அணியை காப்பாற்ற முடியவில்லை. இறுதியில் 26 ஓவர்களிலெல்லாம் அந்த அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.