இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
அதன்பின் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து நாளை நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Trending
இதில் இலங்கை அணியானது ஏற்கென்வே இந்தாண்டு நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்திருந்தது. மேற்கொண்டு அந்த அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் காரணமாக, இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடவுள்ளதால், நிச்சயம் அதற்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு அடுத்தடுத்து வெற்றிகளைப் பெறுவது அவசியமாகும் என்பதால், நிச்சயம் இதில் வெற்றிபெற முனைப்பு கட்டும். மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா ஒரு நல்ல அணி. இந்த குழுவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. ஆசிய கோப்பையில் இந்தியாவை இலங்கை தோற்கடித்திருக்கலாம், ஆனால் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது. தற்போது ஒட்டுமொத்த அணியும் துபாய் ஆடுகளத்துக்குப் பழகியிருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கையின் டாப் ஆர்டர் வீரர் அத்தபத்துவை சீக்கிரமே அவுட்டாக்க முடிந்தால், இலங்கைக்கு அவ்வளவு பேட்டிங் டெப்த் இல்லை. மேலும் அவர்களிடம் ஒரு நல்ல இடது கை சுழற்பந்து வீச்சாளர் உள்ளார். எனவே அவர் இந்தியாவுக்கு எதிராக சவாலை வழங்கக்கூடும். இருப்பினும், மூன்றாவது முறையாக அதே மைதானத்தில் விளையாடும் போது இந்தியா இன்னும் தயாராக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now