ஹர்த்திக்கை வைத்தி ரிஸ்க் எடுக்கக்கூடாது - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பை நெருங்குவதால் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
காயம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, நீண்ட ஓய்வு மற்றும் பயிற்சி காரணமாக முழு ஃபிட்னெஸை அடைந்து ஐபிஎல்லில் ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக அசத்தினார்.
ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு அறிமுக சீசனிலேயே குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
Trending
ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக 4ஆம் வரிசையில் இறங்கி கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடிய பாண்டியா, தன்னால் மிடில் ஓவர்களிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்தார். 15 போட்டிகளில் 487 ரன்களை குவித்தார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அவரது கெரியரின் ஆரம்பத்தில் அசத்தியதை போல, இப்போது ஆல்ரவுண்டராக மீண்டும் அசத்துகிறார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பை நெருங்குவதால் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனவே இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர். எனவே அவரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்ரவுண்டராகவோ, ஆகமொத்தத்தில் எப்படியோ என்னை பொறுத்தமட்டில் ஹர்திக் பாண்டியா அணியில் இருக்கவேண்டும். டி20 உலக கோப்பை நெருங்குவதால், அவருக்கு போதுமான ஓய்வை கொடுத்து தயார்படுத்த வேண்டும். அவரை ஒருநாள் போட்டிகளில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now