
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (மார்ச் 20) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, விராத் கோலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, இந்திய அணி 6 ஓவர்களில் 60 ரன்களை குவித்தது.ரோஹித் சர்மா 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 34 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி என 64 ரன்களை எடுத்திருந்தபோது, ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய சூர்யகுமார், கோலி இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட, ஸ்கோர் கிடுகிடுவென ஏறியது. ஜார்டன் வீசிய 12வது ஒவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து கலக்கினார். 13.1 ஓவர்களில் இந்தியா 141 ரன்களை எடுத்திருந்தபோது சூர்யகுமார் சிக்சர் அடிக்க முயல, பவுண்டரி லைனில் ஜார்டனின் அசத்தலான கேட்சால் அவுடாக நேர்ந்தது. 17 பந்தில் 32 ரன்கள் அடித்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.