
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.
ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் ஹூடா 21, தினேஷ் கார்த்திக் 6, சஞ்சு சாம்சன் 30 நாட் அவுட், அக்சர் பட்டேல் 20 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளைக் எடுத்தனர்.