
ICC Women’s Cricket World Cup 2025 Schedule: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சி நடத்தவுள்ள்ன.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதே இனி இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பையும் பிசிபி வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.