தம்மை டி20 அணியில் சேர்க்க வேண்டாம்; தேர்வுக்குழுவுக்கு கோலி திடீர் வேண்டுகோள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் தம்மை சேர்க்க வேண்டாம் என்று விராட் கோலி தேர்வுக்குழுவிடம் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்களை குவிக்க முடியாமல் விராட் கோலி சொதப்பி வருகிறார். டி20 போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டும். ஆனால் கோலி சமீப காலமாக அதிரடியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கூட விராட் கோலி 3 முறை கோல்டன் டக் ஆனார்,
மேலும் ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்தாலும், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு இல்லை.
Trending
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வரும் 22ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரிலும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் தம்மை சேர்க்க வேண்டாம் என்று விராட் கோலி தேர்வுக்குழுவிடம் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் இந்த முடிவுக்கு காரணம் இது வரை தெரியவில்லை.
எந்த தனிப்பட்ட வேலையும் இல்லாத நிலையில், கோலியின் இந்த கோரிக்கை ரசிகர்களிடையே கவலை அடைய செய்துள்ளது. ஏற்கனவே பார்மில் இல்லாத கோலி தொடர்ந்து ஓய்வு எடுப்பதன் மூலம், அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை என்று விமர்சனம் எழுந்தது. தற்போது கோலியின் எடுத்த முடிவு பல விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக டி20 உலகக் கோப்பை நடைபெற்ற போது அப்போதைய சீனியர் வீரரான சச்சின், டி20 போட்டிக்கு தங்களை தேர்வு செய்யாமல் முற்றிலும் இளம் வீரர்களை தேர்வு செய்து அனுப்பங்கள் என்று கூறி இருந்தார். அதே போல் தற்போது விராட் கோலியும் டி20 போட்டியிலிருந்து விலகி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now