
India To Visit Bangladesh For Three-Match ODI And Two Match Test Series In December (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்துக்குச் செல்லும் இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கடுத்து வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒருநாள் தொடர் டிசம்பர் 4இல் தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்றும் 2ஆவது டெஸ்ட் டிசம்பர் 22 அன்றும் தொடங்குகின்றன.