Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 12, 2023 • 12:10 PM
India Tour Of West Indies 2023: Preview, Probable XI & Fantasy XI Tips!
India Tour Of West Indies 2023: Preview, Probable XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)
Advertisement

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியுடன் வரும் இந்தியாவும், முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் போன ஏமாற்றத்துடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அண்களுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - விண்டசர் பார்க், டொமினிகா
  • நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம் 

2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை இந்தத் தொடரிலிருந்து தொடங்குகிறது இந்திய அணி. முதலிரு சீசன்களிலும் இறுதிப்போட்டி வரை சென்று, அதில் தோல்வி கண்டு துவண்டுள்ள இந்தியா, இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே முன்னேற்றத்துக்கான முனைப்புடன் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அனுபவ வீரரான சேதேஷ்வா் புஜாரா நீக்கம், இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தோ்வு என அதிரடி நடவடிக்கைகள் அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

புஜாரா இல்லாதது இந்திய மிடில் ஆா்டரில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படலாம். முதல் தர கிரிக்கெட்டில் மும்பைக்காக இன்னிங்ஸை தொடங்கிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஏற்கெனவே டெஸ்ட் அனுபவம் உள்ள ஷுப்மன் கில், ‘ஓன் டவுன்’ இடத்துக்கு பொருத்தமாக இருப்பாா் என்பதிலும் சந்தேகம் இல்லை. கேப்டன் ரோஹித், கோலி, ரஹானே போன்ற அனுபவ வீரா்களுக்கான பொறுப்பு இந்தத் தொடரில் அதிகரிக்கவே செய்துள்ளது. 

ரோஹித், கோலி அதிக ரன்கள் சோ்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ள ரஹானே தவறிழைத்தால், அவரிடத்தைப் பிடிக்க ருதுராஜ் தயாராக இருக்கிறாா். ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது அணிக்கு சற்றே சவாலான சூழலாக இருக்கலாம். முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் ஆகியோரோடு இளம் வீரா்களான முகேஷ் குமாா், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி அதை எவ்வாறு எதிா்கொள்வாா்கள் என்பது முக்கியம். சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனா்.

அதேசமயம் சா்வதேச கிரிக்கெட்டில் சமீபகாலமாக சரிவைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன் உச்சமாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருக்கிறது. எனவே, இந்தத் தொடா் மூலம் தன்னை மீட்டுக் கொண்டு சா்வதேச கிரிக்கெட்டில் தனது முத்திரையை மீண்டும் பதிக்கும் முனைப்பு அந்த அணிக்கு உள்ளது. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடுகளும் நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது.

அந்த அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை கீமார் ரோச், ஷானன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசஃப், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிப்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பேட்டிங்கில் ஜொ்மெய்ன் பிளாக்வுட், கேப்டன் கிரெய்க் பிரத்வெய்ட் ஆகியோா் ரன் குவிப்பில் ஈடுபடுவா்.

மேலும் முதல்தர அணியில் சிறப்பாக விளையாடியதன் பேரில், கிா்க் மெக்கன்ஸி, அலிக் அதானஸி ஆகிய பேட்டா்களுக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சற்று இடைவெளிக்குப் பிறகு, ஸ்பின்னா்களான ஜோமெல் வாரிக்கன், ரஹீம் காா்ன்வால் ஆகியோா் மீண்டும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 98
  • வெஸ்ட் இண்டீஸ் - 30
  • இந்தியா - 28
  • முடிவில்லை - 46

மைதானம்

ஆட்டம் நடைபெறும் விண்ட்சா் மைதானத்தில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெறும் முதல் டெஸ்ட் இது. நல்ல பேட்டிங் பிச்சாக அறியப்படும் இந்த ஆடுகளம், அடுத்தடுத்த நாள்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். வானிலை சற்று வெப்பமாக இருப்பதால் பந்துவீசாளர், குறிப்பாக ஸ்பின்னா்களுக்கு சற்று சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), டேக்நரைன் சந்தர்பால், ரேமன் ரெய்ஃபர், அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா, ரஹீம் கார்ன்வால், அல்ஸாரி ஜோசப், கீமார் ரோச், ஜோமல் வாரிக்கன்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோசுவா டி சில்வா
  • பேட்ஸ்மேன்கள்- கிரெய்க் பிராத்வைட், டெக்நரைன் சந்தர்பால், ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள்- முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப் 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement