IND vs AUS, 1st T20I: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மொஹாலியில் நடைபெறுகிறது.
வரும் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி அதற்குமுன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி துவங்கி 23, 25 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. 20ஆம் தேதி நடைபெறும் போட்டி மொஹாலியிலும், அடுத்த இரண்டு போட்டிகளும் நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடக்கவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - பிந்த்ரா கிரிக்கெட் மைதானம், மொஹாலி
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது ஷமிக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். மாற்றாக உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமிக்கு மாற்றாக உமேஷ் யாதவ்தான் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்திய அணி பேட்டிங் வரிசையில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியரது இடங்கள் கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. ஆசியக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பந்த்தான் அதிக வாய்ப்புகளை பெற்றார். இருப்பினும் அவர் திறமையை நிரூபிக்கவில்லை.
இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்குதான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு துறையைப் பொறுத்தவரை ஹர்ஷல் படேல், அக்சர் படேல், சஹல், ஜஸ்பரீத் பும்ரா, தீபக் சஹார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைத்தால், புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு மட்டுமே கொடுக்க முடியும்.
அதேபோல் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில், ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ள டிம் டேவிட் அறிமுகமாக வீரராக களமிறங்க உள்ளார். இதனால், இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் கிளென் மேக்ஸ்வேல், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கமாரூன் கிரீன் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹசில்வுட், ஆஸ்டன் அகர், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் பந்துவீச்சிலும் இருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 23
- இந்தியா - 13
- ஆஸ்திரேலியா - 9
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல் / ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச் (கே), ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட், சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட்.
பேண்டஸி XI
- விக்கெட் கீப்பர் - ஜோஷ் இங்கிலிஸ்
- பேட்டர்ஸ் - ஆரோன் பின்ச், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்
- ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல்
- பந்துவீச்சாளர்கள் – ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸம்பா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்
Win Big, Make Your Cricket Tales Now