இந்தியா vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்களை அடித்தும், பந்துவீச்சளர்கள் சொதப்பல் காரணமாக தோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மழை குறுக்கீடு இருந்ததால், 8 ஓவர்களை கொண்ட ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்திய அணி பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - ராஜிவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருக்கிறது. ஒருவர் சொதப்பினாலும் மற்றவர் பொறுப்பை உணர்ந்து அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்துகிறார்கள். ஆனால், பந்துவீச்சு துறை அப்படியல்ல. பும்ரா இரண்டாவது போட்டியில் வந்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஹர்ஷல் படேல் கடந்த இரண்டு போட்டிகளிலும் மேத்யூ வேடிற்கு எதிராக 19 பந்துகளை வீசி 50 ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார். இன்றும் ஹர்ஷல் இப்படி சொதப்பும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசுவதுதான் இவரது பிரச்சினையாக இருக்கிறது. இதனை சரிசெய்யும் பட்சத்தில் இன்று சிறப்பாக செயல்பட முடியும். அடுத்து புவனேஷ்வர் குமார். இவரது பார்ம் காரணமாக கடந்த போட்டியில் நீக்கப்பட்டார். டெத் ஓவர்களில் இவரது பந்துகள் எடுபடுவதில்லை. இன்று ஒருவேளை புவியும், ஹர்ஷலும் சொதப்பும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து இவர்கள் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஹைதராபாத் பிட்சில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 போட்டியில் 208 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் விராட் கோலி 94* ரன்களை குவித்து பினிஷராக செயல்பட்டார். இது நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், அந்த மன உறுதி மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், இன்று கோலி மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
அதேசமயம் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆடம் ஸாம்பாவை தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள். இதனால், டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தால், இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
மேலும் போட்டி நடைபெறவுள்ள ஹைதராபாத்தில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், போட்டி நடைபெறும்போது மழை பெய்யாது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால், மழையால் பெரிய தாக்கம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 25
- இந்தியா - 14
- ஆஸ்திரேலியா - 1
- முடிவில்லை -1
உத்தேச அணி
இந்தியா – கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புன்வேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச் (கே), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட், டேனியல் சாம்ஸ், சீன் அபோட்/நாதன் எல்லிஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
ஃபெண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - மேத்யூ வேட்
- பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ்
- ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், அக்சர் படேல்
- பந்துவீச்சாளர்கள் – ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஜஸ்பிரித் பும்ரா
Win Big, Make Your Cricket Tales Now