Advertisement

INDW vs AUSW, 3rd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டி நாளை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
India vs Australia, 3rd T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Pro
India vs Australia, 3rd T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Pro (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 12, 2022 • 09:54 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துமுடிந்த 2 போட்டியிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனிலையில் உள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 12, 2022 • 09:54 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது டி20 போட்டியில் போராடி தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று அசத்தி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஷஃபாலி வர்மா என தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் தீப்தி சர்மா, ரேனுகா சிங், மேகனா சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறுவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் போட்டியில் அபாரமான வெற்றியையும், இரண்டாவது போட்டியில் போராடி தோல்வியையும் தழுவியது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டியில் அலிசா ஹீலி, பெத் மூனி, தஹிலா மெக்ராத் ஆகியோர் அடுத்தடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திவருகின்றனர். 

அதிலும் பெத் மூனி மற்றும் தஹிலா மெக்ராத் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதங்களை விளாசி அணியின் முதுகொலும்பாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ஹீதர் கார்ட்னர், கிம் கார்த், மேகன் ஸ்காட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • இந்தியா - 07
  • ஆஸ்திரேலியா - 19
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்திய மகளிர் - ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர் சிங்.

ஆஸ்திரேலிய மகளிர் - பெத் மூனி, அலிசா ஹீலி (கே), தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அனாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் – பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அனாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், தீப்தி ஷர்மா
  • பந்துவீச்சாளர்கள் - அலனா கிங், கிம் கார்த், ராதா யாதவ்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement