வங்கதேசம் vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs இந்தியா
- இடம் - ஸ்ஹூர் அஹ்மத் மைதானம், சட்டோகிராம்
- நேரம் - காலை 9 மணி
போட்டி முன்னோட்டம்
காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் பங்கேற்க மாட்டார் என்றும் 2ஆவது டெஸ்ட்டில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கேப்டனாக கேஎல் ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுப்மான் கில்லுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேசமயம் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதால் தனது இடத்தை விட்டுக்கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அல்லது சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உனாத்கட் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோருன் உத்தரபிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேற, வங்கதேசத்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய உத்வேகத்துடன் இப்போட்டியில் களமிறங்கவுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியிலும் அந்த அணிக்கு இந்திய அணிக்கு மற்றொரு அதிர்ச்சியைக் கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் லிட்டன் தாஸ், அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன், முஷ்பிக்கூர் ஆகியோரும் பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன், முஷ்டபிசூர் ரஹ்மான், எபோடட் ஹொசைன் ஆகியோரையும் கொண்டுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 11
- இந்தியா - 09
- வங்கதேசம் - 0
- முடிவில்லை - 2
உத்தேச அணி
இந்தியா - அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎல் ராகுல் (கே), ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
வங்கதேசம் - லிட்டன் தாஸ், அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிகுர் ரஹீம், ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, லிட்டன் தாஸ், ஷுப்மான் கில்
- ஆல்-ரவுண்டர்கள் - ஷகிப் அல் ஹசன், ரவிச்சந்திரன் அஷ்வின், மெஹிதி ஹசன் மிராஸ்
- பந்துவீச்சாளர்கள் - தஸ்கின் அகமது, முகமது சிராஜ், எபடோட் ஹொசைன்.
Win Big, Make Your Cricket Tales Now