Advertisement

வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
India vs Bangladesh, 2nd ODI – IND vs BAN Cricket Match Preview, Prediction, Where To Watch, Probabl
India vs Bangladesh, 2nd ODI – IND vs BAN Cricket Match Preview, Prediction, Where To Watch, Probabl (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 06, 2022 • 08:05 PM

வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 06, 2022 • 08:05 PM

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் ஆட்டம் நாளை அதே டாக்கா மைதானத்தில் பகல் 11:30 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs இந்தியா
  • இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நேரம் - பகல் 11.30 மணி

போட்டி முன்னோட்டம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலே இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், அணியின் திட்டங்களை கேப்டன் ரோஹித் மாற்றி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையில் சில மாற்றங்கள் நிகழும் என்றும் தெரிகிறது. அதன்படி, ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் கூடுதல் அனுபவத்தை சேர்க்க ஷபாஸ் அஹமதுக்கு பதில் அக்சர் படேல் வர உள்ளார். 

மேலும் குல்தீப் சென்னுக்கு பதிலாக மற்றொரு இளம் வேகமான உம்ரான் மாலிக் சேர்க்கப்பட உள்ளார். ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்பட்டதால் அந்தத் துறையில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் ஷார்ட்-பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறுவது தொடர்ந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் அவர் மீண்டும் ஷார்ட் பந்தில் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். எபாடோட் ஷார்ட் பந்தின் வரிசையை தொடர்ந்து பந்துவீசினார். மற்றும் ஸ்ரேயாஸ் மீது அதிக அழுத்தத்தை குவித்தார். இறுதியில் அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்த ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

இந்தியாவுக்கு நல்ல வலுவான மற்றும் விரைவான தொடக்கம் தேவை. ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடக்க நிலையைத் தவிர, இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய தொடக்கங்கள் சமமானதாக இருந்தன.

ஷிகர் தவானின் ஸ்டிரைக் ரேட் ஒருநாள் போட்டிகளில் குறைந்து வருகிறது. அவர் இந்த ஆண்டு 20 ஒருநாள் போட்டிகளில் 75 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். மறுபுறம், கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட காலமாக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால், இந்தியாவின் டாப் ஆடர் கவலை தருவதாகவே உள்ளது. உலகக் கோப்பைக்கு முன் இந்த ஜோடியில் யார் நிலையான தொடக்க வீரர் என்பதை நிர்வாகம் கண்டறிய வேண்டும்.

அதேசமயம் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி கடந்த போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி பேட்டர்களை நிலைகுழையவைத்தனர். அதிலும் ஷாகிப் அல் ஹசன், எபோடட் ஹொசைன் ஆகியோர் இந்திய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியைத் தந்துள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் பேட்டிங்கில் லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் சொதப்பியது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், நாளைய போட்டியில் அதனை அவர்கள் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதேபோல் நாளைய போட்டியில் வங்கதேசம் வென்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 37
  • இந்தியா - 30
  • வங்கதேசம் - 06
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்/ஷாபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், குல்தீப் சென்

வங்கதேசம் - லிட்டன் தாஸ் (கே), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement