1-mdl.jpg)
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றின் நாளைய லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதனாத்தில் நடைபெறவுள்ளது.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் 4 புள்ளிகளை பெற்று 2ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி அடுத்து வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுவிட்டால், நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
அதேபோல் வங்கதேச அணியும் 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த அணியும் நாளை இந்தியாவுக்கு எதிராக, அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுவிட்டால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இதனால், நாளைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குரூப் பி பிரிவில் மற்றொரு அரையிறுதி இடத்தை தென் ஆப்பிரிக்க அணி கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது.