ENG vs IND: நூறு விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நேரில் காண மைதானத்தில் நூறு விழுக்காடு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இங்கிலாந்து சென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி சவுத்தாம்டனில் நடைபெற்றது.
Trending
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண அப்போது 4 ஆயிரம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அப்போது இங்கிலாந்தில் கரோனா பொது முடக்கம் அமலில் இருந்தது.
ஆனால் இப்போது இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியை காண மைதானத்தின் முழு அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சில தளர்வுகளை அளித்ததையடுத்து ரசிகர்கள் முழு அளவில் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now