X close
X close

இந்தியா vs நியூசிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 23, 2023 • 18:42 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து கடைசி போட்டி நாளை இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தால் இந்தியா நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் அணி என்ற பெருமையை பெறும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Trending


போட்டி தகவல்கள்

 • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
 • இடம் - ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர்
 • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்திய ஏற்கெனவே இத்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. முக்கியமான போட்டியாக இருந்தாலும் கூட இதில் மாற்றங்களை செய்ய ரோஹித் சர்மா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய அவர், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீண்ட நாட்களாக பந்துவீசி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் வருகிறது. எனவே அவர்களின் பணிச்சுமையை யோசிக்க வேண்டியுள்ளது எனக் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல தான் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார், ஆனால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இஷான் கிஷானை ஓப்பனிங்கில் களமிறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் கேஎஸ் பரத்தை கொண்டு வரலாம். ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகியுள்ள கே.எல்.பரத் அதற்கு தயாராகும் வகையிலாவது 3வது போட்டியில் விளையாடியாக வேண்டும். இல்லையெனில் கில்லுக்கு மாற்றாக ராஜட் பட்டிதாரும் வாய்ப்பு பெற காத்துள்ளார்.

அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர் சபாஷ் அகமதுக்காக வாஷிங்டன் சுந்தர் வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல மற்றொரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம். அட்டகாசமான ஃபார்மில் உள்ள சாஹலுக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கப்படவில்லை.

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது சிராஜ், ஷமி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நீக்கப்படுவதை ரோகித்தே மறைமுகமாக கூறிவிட்டார். எனவே அவரின் இடத்திற்கு உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம். ஷர்துல் தாக்கூர் வழக்கம் போல தனது செயல்பாட்டை செய்வார்.

அதேசமயம் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டிரெண்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் அந்த அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அதிலும் முதல் போட்டியில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபார ஆட்டத்தின் காரணமாக இறுதிவரை போராடியும் தோல்வியைத் தழுவியது.

அவரைத்தவிர்த்து மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் ஓரளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். ஆனால் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்படும் ஃபின் ஆலன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், டாம் லேதம் என அனைவரும் அடுத்தடுத்து சொதப்பியுள்ளதால் அந்த அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

பந்துவீச்சிலும் லோக்கி ஃபர்குசன், ஹென்றி ஷிப்லி, பிளைர் டிக்னர், மிட்செல் சண்ட்னர் ஆகியோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் இந்தியாவுடான தோல்விக்கு பிறகு நியூசிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்ற ஒயிட்வாஷையாவது தவிர்க்கும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

 • மோதிய போட்டிகள் - 115
 • இந்தியா - 57
 • நியூசிலாந்து - 50
 • டிரா - 01
 • முடிவில்லை - 07

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் / ரஜத் படிதார், ஹர்திக் பாண்டியா / ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கே), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

 • விக்கெட் கீப்பர்கள் - கிளென் பிலிப்ஸ்
 • பேட்டர்ஸ் - ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, டெவோன் கான்வே
 • ஆல்ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹர்திக் பாண்டியா
 • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், முகமது ஷமி, லோக்கி ஃபர்குசன்


Win Big, Make Your Cricket Tales Now