Advertisement

இந்த மைதானத்தை சரியாக கணிக்கவில்லை - தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா!

இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நியூசிலாந்து அணி உட்பட நாங்கள் யாருமே கணிக்கவில்லை. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 27, 2023 • 23:26 PM
India vs New Zealand: Ranchi pitch surprised us, says Hardik Pandya after losing 1st T20I
India vs New Zealand: Ranchi pitch surprised us, says Hardik Pandya after losing 1st T20I (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய அழைத்தது. 

Trending


அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்த ஆடுகளத்தில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஆரம்பத்தில் இரண்டு விக்கட்டுகளை எடுத்து வாஷிங்டன் சுந்தர் செக் வைத்தார். ஆனாலும் கான்வோ மற்றும் டேரில் மிட்சல் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் விளாச நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் குவித்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி சரியான பங்களிப்பை செய்யாமல் ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுக்க இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுக்க இந்திய அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தத் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நியூசிலாந்து அணி உட்பட நாங்கள் யாருமே கணிக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து எங்களை விட சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியது. இங்கு பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக சுழன்று திரும்பியது. 

மேலும் பந்து பவுன்ஸ் ஆகவும் செய்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. சூர்யாவும் நானும் விளையாடும் பொழுது இந்த இலக்கை எட்டிப் பிடித்து விட முடியும் என்று நினைத்தோம். மேலும் நாங்கள் 25 ரன்களை கூடுதலாக கொடுத்து விட்டோம். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக வழக்கமான சிறப்பான செயல்பாட்டை காட்டினார். இவரும் அக்சர் படேலும் தொடர்ந்து இப்படியே சிறப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பயனைத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement