டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை:நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -இந்தியா vs நியூசிலாந்து
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியைச் சந்தித்தது.
அதன்காரணமாக இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. அணியின் பேட்டிங்கில் ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக விளைடாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதேசமயம் பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் பெரிதளவில் சோபிக்காததால் இப்போட்டியில் அஸ்வின், ஷர்துல் தாக்கூர் இடம்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பாகிஸ்தானுடன் தோல்வியைச் சந்தித்துள்ளதால், அந்த அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் நியூசிலாந்து அணியில் கப்தில், வில்லியம்சன், நீஷம், கான்வே, பிலீப்ஸ் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்களுடன், ட்ரெண்ட் போல்ட், சாண்டனர், சோதி, சௌதி ஆகியோரும் இருப்பது இந்திய அணிக்கு சற்று தலைவலியை ஏற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 16
- இந்தியா - 8
- நியூசிலாந்து - 8
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டேவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ட்ரென்ட் போல்ட்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், கேஎல் ராகுல்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் நீஷம்
- பந்துவீச்சாளர்கள் - இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி
Win Big, Make Your Cricket Tales Now