
India vs New Zealand: Yuzvendra Chahal, Shreyas Iyer back in T20 squad while R Ashwin retains spot (Image Source: Google)
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.
டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய அஸ்வின், 3 போட்டிகாளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் இந்திய டி20 அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார்.