டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது சூப்பர் 12 சுற்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொள்ள இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணி இந்திய அணியை வீழ்த்தி இருந்ததால் அதற்கு பதிலடி தரும் விதமாக இம்முறை பாகிஸ்தானை வீழ்த்தும் முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மும்முரமாக தயாராகி வருகிறது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
Trending
அதன்படி ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரை துவக்க வீரர்களாகவும், மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். அதேபோன்று பின்வரிசையில் பினிஷர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங் சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹல் மற்றும் அக்சர்பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளார்.
அவர் தேர்வு செய்த இந்த பட்டியலில் தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவருக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். ஹர்ஷல் பட்டேலுக்கு இந்த தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தீபக் ஹூடா மற்றும் அஸ்வின் ஆகிய இருவருக்கும் முதல் சில போட்டிகளில் வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது என்றும் அதேபோன்று ரிஷப் பந்திற்கும் இடம் கிடைப்பதும் கடினம் என்று கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த பிளேயிங் லெவன்: கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ்,ஹார்டிக் பாண்டியா,தினேஷ் கார்த்திக்,அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now