பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை - பிசிசிஐ!
நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை.
இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன. இந்த நிலையில் , பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி , நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது.
Trending
இந்த நிலையில் இந்த செய்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ ) தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை. பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now