
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் டெஸ்ட் விளையாடி சொதப்பியதால், இந்தியா கடைசி நேரத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
லக்னோ மைதானம் வேகத்திற்கும், சுழலுக்கும் சாதகமாக இருந்ததால் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் திணறினார்கள். ஆனால், இரண்டாவது போட்டி நடைபெறவுள்ள ராஞ்சி மைதானம் அப்படி கிடையாது. பேட்டர்கள், பௌலர்கள் இருவருக்கும் சம அளவில் போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் பயமில்லாமல் விளையாடியே ஆக வேண்டும். இரண்டாவது போட்டியிலும் டெஸ்ட் விளையாடினால், பின்னடைவுதான் ஏற்படும்.
சுழலுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்படவில்லை. படுமோசமாக சொதப்பி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாகும். இதனால், இரண்டாவது போட்டியில் ஷாபஸ் அகமது அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.