
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அனல் பறக்கும் ஆரம்பத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஜூன் 9இல் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை சேசிங்கில் சொல்லி அடித்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள அந்த அணி சொந்த மண்ணாக இருந்தாலும் பொறுப்புடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால்தான் எங்களை வீழ்த்த முடியும் என்று இந்தியாவிற்கு சவாலை காட்டியுள்ளது.
இதை தொடர்ந்து இத்தொடரின் 2ஆவது போட்டி ஜூன் இன்ரு இரவு 7 மணிக்கு ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெறுகிறது. அதற்காக இரு அணி வீரர்களும் அங்கு சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்வதற்கு இந்தியா போராட உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்க
- இடம் - கட்டாக், ஒடிசா
- நேரம் - இரவு 7 மணி