இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கௌகாத்தியில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி கௌகாத்தியில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - பரஸ்பரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து கவலைப்படவே தேவையில்லை. ஒருவர் அடிக்கவில்லை என்றாலும், மற்றவர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்துவிடுகின்றனர். கௌகாத்தி பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமானது என்பதால், பேட்டிங் துறை குறித்து பிரச்சினையே இல்லை.
ஆனால் பந்துவீச்சு துறைதான் பெரும் பிரச்சினையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் பேட்டர்களுக்கு சாதகமான பிட்ச்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். இதனால், இன்று இவர்கள் செயல்படும் விதத்தை வைத்துதான், வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும் எனக் கருதப்படுகிறது. மேலும் இந்த பிட்சில் ஸ்பின்னர்களால் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் அக்சர் படேல், அஸ்வின் இருவரும் அபாரமாக பந்துவீசி அசத்த வாய்ப்புள்ளது.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி கடந்த போட்டியில் பவர் பிளேவில் 9/5 என படுமோசமாக திணறியது. திருவனந்தபுரத்தில் இந்திய அணி முதலில் களமிறங்கியிருந்தாலும் இப்படிதான் சொதப்பியிருக்கும். அங்கிருந்த பிட்ச் தொடக்கத்தில் முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருந்தது. ஆனால், கௌகாத்தி பிட்ச் அப்படியல்ல. பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியும் என்பதால் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் முதல் போட்டியில் விளையாடியதுபோல் அல்லாமல் ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெம்பா பவுமா தொடர்ந்து டி20 பார்மெட்டில் சொதப்பி வருகிறார். டி காக் கடந்த போட்டியில் எதிர்பாராத விதமாகத்தான் அவுட் ஆனார். அதனால் இப்போட்டியில் ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. மற்ற பேட்டர்களும் அதிரடி காட்ட பிட்ச் ஒத்துழைப்பு கொடுக்கும். தென் ஆப்பிரிக்க பௌலர்கள் பேட்டர்களுக்கு சாதகமான பிட்ச்களிலும் அபாரமாக பந்துவீசக் கூடியவர்கள். இதனால் இன்றும் பர்னல், ரபாடா, நோர்ட்ஜே ஆகியோர் அபாரமாக செயல்படுவார்கள் எனக் கருதப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 21
- இந்தியா - 12
- தென் ஆப்பிரிக்கா - 8
- முடிவில்லை- 1
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்
தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக் , டெம்பா பவுமா (கே), ரிலீ ரோசோவ் / ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், ஐடன் மார்க்ரம், வெய்ன் பார்னெல்
- பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே
Win Big, Make Your Cricket Tales Now