இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற, ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
Trending
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- டாஸ் நேரம் - மதியம் 1 மணி
- போட்டி நேரம் - 1.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் சொதப்பினாலும், இரண்டாவது போட்டியில் அபாரமாக செயல்பட்டு தொடரைத் தக்கவைத்துள்ளது. அதிலும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோரது பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு மிகமுக்கியமானதாக அமைந்துள்ளது.
அதைத்தவிர்த்து இரண்டாவது போட்டியின் பந்துவீச்சும் அணியின் வெற்றியில் பங்காற்றியுள்ளது. அறிமுக வீரர் சபாஸ் அஹ்மத், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
ஆனாலும் பேட்டிங்கில் கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. அதனால் இனிவரும் போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இத்தொடரில் பங்கேற்றது. காரணம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான சூப்பர் லீக் தரவரிசை பட்டியலில் 59 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த போட்டியில் வென்றால் இலங்கை (62 புள்ளிகள்), அயர்லாந்து (68 புள்ளிகள்) 69 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தை பிடித்துவிட முடியும்.
இந்த 3 போட்டிகளிலும் வென்றால் 79 புள்ளிகள் கிடைக்கும். அடுத்து, மற்ற அணிகளுடனான ஒருநாள் தொடரிலும் வென்றால் மட்டுமே 7ஆவது இடம் வரை முன்னேற முடியும். இதனால், மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருந்தது. அதில் தற்போது ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கி அந்த அணி களமிறக்கவுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி பேட்டர்கள், மிடில் ஓவர்களின் போது ஸ்பின்னர்களுக்கு எதிராக படுமோசமாக திணறுகிறார்கள். குல்தீப் யாதவ், ஷாபஸ் அகமது ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால், தென் ஆப்பிரிக்கா மிடில் ஓவர்களின்போது சொதப்ப வாய்ப்புள்ளது. இந்த கண்டத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா தப்பித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மற்றபடி பந்துவீச்சில் அந்த அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 89
- இந்தியா - 36
- தென் ஆப்பிரிக்கா - 50
- முடிவில்லை - 3
உத்தேச அணி
இந்தியா - ஷிகர் தவான் (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்.
தென் ஆப்பிரிக்கா - ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ் (கே), ஜார்ன் ஃபோர்டுயின்/லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜெ
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன்
- பேட்டர்ஸ் - ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஷ்ரேயாஸ் ஐயர்
- ஆல்-ரவுண்டர்கள் - ஷர்துல் தாக்கூர், ஐடன் மார்க்ரம்
- பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி / குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
Win Big, Make Your Cricket Tales Now