இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
IND vs SA, 1st Test, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இந்த போட்டி நடைபெற இருப்பதன் காரணமாக இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.