
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 12 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், நாளை பெர்த் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா – தென்ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி, 4 புள்ளிகளுடன் குரூப்-2இல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வரிசை சோதிக்கப்பட்ட நிலையில், மிடில்-ஆடர் அதிகம் சோதிக்கப்படவில்லை.
தொடக்க ஆட்டத்தில் அக்சர் படேல் களமாடியது, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து என சிறிய சோதனை ஓட்டமே நடந்துள்ளது. பாகிஸ்தானை வீழ்த்த உதவிய அஸ்வின் இனி வரும் போட்டிகளிலும் அப்படியே செயல்படுவாரா? இந்திய அணியின் லோ-ஆடரில் உள்ள வீரர்கள் அணியின் வெற்றிக்கு கை கொடுப்பார்களாக? என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன. எனினும், இனி வரும் போட்டிகளில் அவற்றை இந்திய அணி சரி செய்தால், அணி கோப்பையை வெல்லும் என்பதில் ஐயமில்லை.