
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின், ஞாயிறு அன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி ஞாயிறு மாலை 4:30 மணிக்கு பெர்த்தில் துவங்கி நடைபெறவுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போட்டியில் கிடைக்கப் போகும் வெற்றி, தோல்விதான் மூன்று அணிகளின் அரையிறுதி வாய்ப்பை கிட்டதிட்ட உறுதி செய்யும்.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு, இந்திய அணியைவிட ஒருபடி மேலே இருக்கும். மேலும், பாகிஸ்தான் அணியும், தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும். அடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்று, அந்த அணி நெதர்லாந்து, வங்கதேசத்தையும் வீழ்த்தினால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.