இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நாளை நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெறுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
- நேரம் - மதியம் 1.30 மணி
போட்டி முன்னோட்டம்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மீண்டும் ஓய்விலிருந்து அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் இளம் வீரர்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷான், உம்ரான் மாலிக் ஆகியோரும் ஒருநாள் அணியில் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் நடப்பாண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இத்தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அணியின் பேட்டிங்கில் ரோஹித், விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவும் முரட்டு ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுலுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனால் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் உம்ரான் மாலிக்கும் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது.
மறுபக்கம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாரட்டினைப் பெற்றது. இருப்பினும் கடைசி டி20 போட்டியில் அந்த அணியின் பேட்டிங் பெரிதளவில் சோபிக்காததே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கபடுகிறது.
இருப்பினும் கேப்டன் தசுன் ஷனகா சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவருடன், பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்சன் மதுசங்கா, லஹிரு குமாரா ஆகியோர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 162
- இந்தியா - 93
- இலங்கை - 57
- டிரா - 01
- முடிவில்லை - 11
உத்தேச லெவன்
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி
இலங்கை – பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, தில்ஷன் மதுஷங்க, லஹிரு குமார.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now