India vs Sri Lanka, 1st T20I – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் நாளை மறுநாள் (பிப்ரவரி 24) தொடங்குகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- இடம் - எக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
தற்போது அதே உத்வேகத்துடன் இலங்கைக்கு எதிரான தொடரிலும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக கருதப்படுகிறது.
தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி சமீபத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்துள்ளது.
மேலும் இந்திய தொடருக்கான இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா கரோனா காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு நிம்மதியளிக்கும் விசயமாக உள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 22
- இந்தியா வெற்றி -14
- இலங்கை வெற்றி - 7
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்/இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்/அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
இலங்கை - கமில் மிஷார, பதும் நிஷங்கா, சரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷனக (கே), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார
ஃபெண்டஸி லெவன் டிப்ஸ்:
- விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷான், குசல் மெண்டிஸ்
- பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, பதும் நிஷங்கா
- ஆல்-ரவுண்டர்கள் - வெங்கடேஷ் ஐயர், சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க
- பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, துஷ்மந்த சமீரா
Win Big, Make Your Cricket Tales Now