
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் போட்டியில் வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது. இருப்பினும் இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனில் பெரிய தவறு ஒன்றை செய்கிறது. இந்தியா போன்ற ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால 3 சுழற்பந்து வீச தெரிந்த வீரர்கள் அணிக்கு தேவை. ஆனால், ரோஹித் சர்மா வெளிநாட்டில் விளையாடுவது போல் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து 4 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறார்.