இந்தியா vs இலங்கை, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள இலங்கை அணி எப்படியாவது ஒருநாள் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. கொல்கத்தா ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் நிலையில், பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- இந்தியா vs இலங்கை
- இடம் - ஈடன் கார்டன் மைதானம்,கொல்கத்தா
- நேரம் - மதியம் 1.30 மணி
போட்டி மூன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் போட்டியில் வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.
இருப்பினும் இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனில் பெரிய தவறு ஒன்றை செய்கிறது. இந்தியா போன்ற ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால 3 சுழற்பந்து வீச தெரிந்த வீரர்கள் அணிக்கு தேவை. ஆனால், ரோஹித் சர்மா வெளிநாட்டில் விளையாடுவது போல் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து 4 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறார்.
இதனால் நாளைய போட்டியில் மேலும் இரு சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வேகப்பந்து வீச்சில் உம்ரான் மாலிக், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் ரன்களை வாரி வழங்கியுள்ளது இந்திய அணிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதேசமயம் இலங்கை அணி முதலாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இருபிரிவிலும் சொதப்பியது. இருப்பினும் அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக கேப்டன் தசுன் ஷனகாவின் சதம் மற்றும் பதும் நிஷங்காவின் அரைசதம் அமைந்துள்ளது. ஆனால் அவர்களைத் தாண்டி குசால் மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வநிந்து ஹசங்கா, தில்சன் மதுசங்கா, தசுன் ரஜிதா ஆகியோரும் இருப்பினும் அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளனார். மேலும் நாளைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தால் ஒருநாள் தொடரையும் இழக்கும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -163
- இந்தியா - 94
- இலங்கை -57
- டிரா - 01
- முடிவில்லை - 11
உத்தேச லெவன்
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை – பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க/லஹிரு குமார.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now