இந்தியா vs இலங்கை, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட டி20 தொடரை ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் 67 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2ஆவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
Trending
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- இடம் - திருவனந்தபுரம்
- நேரம் - மதியம் 1.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. இதனால் முதல் 2 போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால் இந்த ஆட்டத்திலாவது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த அவர் இலங்கைக்கு எதிரான முதல் போட்டிக்கு 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை. பேட்டிங்கில் விராட் கோலி, கேஎல் ராகுல், கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும், பந்து வீச்சில் முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
அதேசமயம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. ஆறுதல் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பேட்டிங்கில் நுவனிந்து ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், தசுன் ஷனகா ஆகியோரும் பந்துவீச்சில் லஹிரு குமாரா, கசுன் ரஜிதா, வநிந்து ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோரும் உள்ளனர்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 164
- இந்தியா - 95
- இலங்கை - 57
- டிரா - 01
- முடிவில்லை - 11
உத்தேச லெவன்
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில் / இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் / சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.
இலங்கை – நுவனிந்து ஃபெர்னாண்டோ, பதும் நிஷங்கா/அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கேட்ச்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, தில்சன் மதுஷங்க/லஹிரு குமார.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: குசல் மெண்டிஸ், கேஎல் ராகுல்
- பேட்டிங்: விராட் கோலி, பதும் நிசாங்கா, ஷ்ரேயாஸ் ஐயர்
- ஆல்ரவுண்டர்: தசுன் ஷனகா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சு: உம்ரான் மாலிக், கசுன் ரஜிதா, குல்தீப் யாதவ்
Win Big, Make Your Cricket Tales Now