
India vs Sri Lanka Probable Playing XI - Will Axar Patel Play? (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் 12ம் தேதி தொடங்கி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
பெங்களூருவில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்படும். 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டு, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். எனவே இப்போட்டிக்கான ஆடும் லெவனில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அக்ஸர் படேல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.