ரசிகர்களை நெகிழ்ச்சியடை செய்த விராட் கோலி!
மொஹாலியில் வலைப்பயிற்சியில் இருந்த விராட் கோலி, இளம் ரசிகர்களுக்காக செய்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரின் போது ஓய்வுக்காக வெளியேறிய விராட் கோலி, இலங்கை டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. நேரடியாக இலங்கை அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதாக அறிவித்தார்.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று மொஹாலி சென்றடைந்த விராட் கோலி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு ஏற்கனவே ரிஷப் பந்த், அஸ்வின், உமேஷ் யாதவ், சுப்மன் கில், முகமது ஷமி, ஹனுமா விஹாரி ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
Trending
இந்நிலையில் நேற்று கோலி வலைப்பயிற்சிக்கு சென்ற போது தான் சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மைதானத்தின் வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த இளம் ரசிகர்கள் சிலர் கோலியை பார்க்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். மேலும் அவரின் ஆட்டோகிராஃபும் போட்டு தருமாறு கோரி வந்தனர். இது உள்ளே இருந்த கோலிக்கு எப்படியோ கேட்டுள்ளது.
இதனையடுத்து திடீரென மைதான பாதுகாவலர்களை தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தார். பின்பு, அந்த ரசிகர்களின் ஜெர்ஸிகளை வாங்கிக்கொண்டு வாருங்கள் எனக்கூறிவிட்டு சென்றார். இதன்பின்னர் தனது அறைக்கு செல்லாத கோலி, மைதானத்திலேயே நின்றிருந்து, ஜெர்ஸிகள் வந்தவுடன் அதன் பின் புறத்தில் தனது ஆட்டோகிராஃபை போட்டுக்கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கரோனா பயோ பபுள் விதிமுறைகளால் அவரால் நேரடியாக ரசிகர்களை காண முடியவில்லை.
கோலியின் இந்த செயலால் நெகிழ்ச்சியடைந்த அந்த ரசிகர் ஒருவர், கோலியின் ஆட்டோகிராஃப் கிடைக்கும் என நான் நினைத்துப்பார்க்கவே இல்லை. எங்களின் கோரிக்கையை பொறுமையாக கேட்டு அதனை செய்துக்கொடுத்தார். அவரை காண வேண்டும் என வந்தேன். ஆனால் தற்போது ஆட்டோகிராஃப் அதனைவிட பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனக்கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now