Advertisement

வெளியானது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு? எப்போது நடத்தப்படும்? என்று  பிசிசிஐ அட்டவணை வெளியிட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan June 12, 2023 • 22:24 PM
India vs West Indies 2023 schedule announced!
India vs West Indies 2023 schedule announced! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.  அதன்படி பார்படாஸ், டிரினிடாட்டில் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் டிரினிடாட், கயானா, ஃபுளோரிடாவில் ஐந்து டி20 போட்டிகளும், இதற்கு முன்னதாக டொமினிகா, ஓவல் டிரினிடாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின்றன். இதில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது குறிபபிடத்தக்கது.

இந்தத் தொடர் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடையும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஜூலை 5-6 தேதிகளில் வெஸ்ட் இண்டீஸ் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்து மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டிஸுக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending


போட்டி அட்டவணை 

டெஸ்ட் தொடர் 

  • ஜூலை 12-16: டொமினிகாவில் முதல் டெஸ்ட்
  • ஜூலை 20-24: டிரினிடாட்டில் 2ஆவது டெஸ்ட்

ஒருநாள் தொடர் 

  • ஜூலை 27: பார்படாஸில் முதல் ஒருநாள் போட்டி
  • ஜூலை 29: பார்படாஸில் 2வது ஒருநாள் போட்டி
  • ஆகஸ்ட் 1: டிரினிடாட்டில் 3வது ஒருநாள் போட்டி

டி20 தொடர்

  • ஆகஸ்ட் 4: டிரினிடாட்டில் முதல் டி20 ஐ
  • ஆகஸ்ட் 6: கயானாவில் 2வது டி20
  • ஆகஸ்ட் 8: கயானாவில் 3வது டி20
  • ஆகஸ்ட் 12: ஃப்ளோரிடாவில் 4வது டி20ஐ
  • ஆகஸ்ட் 13: ஃப்ளோரிடாவில் 5வது டி20ஐ


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement