இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கியுள்ளோம் - பாபர் ஆசம்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்தது. அதன்படி நடப்பு டி20 உலககோப்பை தொடரானது அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் மோதவுள்ள போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் ,“எங்கள் அணியை காட்டிலும் இந்திய அணிக்கு அந்த போட்டியில் அழுத்தம் அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்திய அணி கடந்த சில காலங்களில் பெரிய அளவில் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதுதவிர ஐபிஎல் தொடர் முடிந்து அவர்கள் நேரடியாக இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கின்றனர்.
அமீரகத்தில் இருக்கும் அனைத்து மைதானங்களும் எங்களுக்கு சொந்த மைதானங்கள் போன்றவை. ஏனெனில் நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக அங்கு விளையாடி வருகிறோம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நாங்கள் அங்கு விளையாடி வருவதால் அங்கு உள்ள மைதானங்கள் அனைத்தும் எங்களுக்கு சொந்த மைதானங்கள் போன்றவை தான்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஏற்கனவே அமீரகத்தில் நாங்கள் பல பெரிய அணிகளை வீழ்த்தி உள்ளதால் இம்முறையும் நாங்கள் அங்கு சிறப்பாக செயல்படுவோம். இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணியை எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த போட்டியை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now