Advertisement

இங்கிலாந்து vs இந்தியா மூன்றாவது ஒருநாள் போட்டி - தொடரை வெல்வது யார்?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது.

Advertisement
India Will Eye To Win The Final Battle & Clinch Series Against England At Manchester
India Will Eye To Win The Final Battle & Clinch Series Against England At Manchester (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 17, 2022 • 11:51 AM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 17, 2022 • 11:51 AM

இந்நிலையில் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Trending

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 2ஆவது ஆட்டத்தில் ரன் எடுக்காமலேயே திரும்பினார். அதேபோல் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.

அதனால் விராட் கோலி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவண் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, யுவேந்திர சஹல், மொகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற தீவிரமாக முயலும். பேட்டிங்கில் அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக உள்ளனர். 

அந்த அணியின் பந்துவீச்சில் ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ் ஆகியோர் திறம்பட செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தர முயல்வர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement