Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடும் இந்திய மகளிர் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 30, 2024 • 23:00 PM
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாடவுள்ளது. 

அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஜூன் 16ஆம் தேதி தொடங்கி ஜூலை 09ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Trending


இந்நிலையில் இத்தொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வடிவிலான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்திரேகர் ஆகியோர் மூன்று வடிவிலான அணியிலும் இடம்பிடித்துள்ள நிலையிலும், அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் *, ரிச்சா கோஷ், உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ராதா யாதவ், ஆஷா சோபனா, ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக், பூஜா வஸ்திரேகர் *, ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, பிரியா புனியா

இந்திய மகளிர் டெஸ்ட் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் *, ரிச்சா கோஷ், உமா செத்ரி, தீப்தி சர்மா, ஸ்நே ராணா, சைகா இஷாக், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூஜா வஸ்திரேர் *, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், மேக்னா சிங், பிரியா புனியா

இந்திய டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, உமா செத்ரி, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் *, சாஜனா சஜீவன், தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், ஆஷா சோபனா, பூஜா வஸ்திரேகர் *, ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - ஜூன் 16: பிற்பகல் 1:30 மணி, பெங்களூரு
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜூன் 19: மதியம் 1:30 மணி, பெங்களூரு
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜூன் 23: மதியம் 1:30 மணி, பெங்களூரு
  • டெஸ்ட் - ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை: காலை 9:30 மணி, சென்னை
  • முதல் டி20 - ஜூலை 5: இரவு 7:00 மணி, சென்னை
  • இர்னடாவது டி20 - ஜூலை 7: இரவு 7:00 மணி, சென்னை
  • மூன்றாவது டி20 - ஜூலை 9: இரவு 7:00 மணி, சென்னை

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement