
IND-W vs ENG-W, Match 20, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும், இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND-W vs ENG-W: Match Details