
கடந்த ஆண்டு முதலே இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பாஸ்பால் என்ற அதிரடியான அணுகுமுறைக்கு டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை போல தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிக்கும் இந்த முறைக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அணுகு முறையில் மூலம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியான அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த பாஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அணுகுமுறையின் மூலம் இங்கிலாந்து அணி நியூசிலாந்து பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியுடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிக குறைந்த வித்தியாசங்களில் தோல்வியை தழுவியது. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பாஸ்பால் முறையை குறை கூறினர்.
இருப்பினும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் தொடர்ந்து பாஸ்பால் முறையில் விளையாடி மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பாஸ்பால் முறை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. தற்போது டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால் அதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளை வெற்றியை நோக்கி விளையாடுவதை வீரர்கள் தங்கள் பிரதானமாக கொண்டிருக்கின்றனர்.