
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வரும் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. அந்த பட்டியலில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம் பெறாதது பேசுப்பொருளாகியுள்ளது.
21 வயதாகும் இளம் வீரர்கள் கடந்த 2 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே போல தொடர் காயங்களால் தொடரில் நீடிக்க முடியாமல் போனது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும், பிரித்வி ஷாவின் சொதப்பல் பயணம் தொடர்ந்தது. இதனால், இங்கிலாந்து தொடரின் போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் 800 ரன்களுக்கு மேல் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் 2021 தொடரிலும் டெல்லி அணிக்காக அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தார். 8 போட்டிகளில் ஆடிய அவர் 308 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.