இந்திய ஸ்பின்னர்களை விளையாடுவதில் சோதிக்கும் விதமாக அமையும் - டெம்பா பவுமா!
இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணியும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே இல்லாமல் பயணிக்கும் இந்திய அணியும் இன்று நடைபெறும் போட்டியில் மோதவுள்ளனர்.
இரு அணிகளும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். குல்தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் மத்திய வரிசையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். அதனால், ஆட்டத்தின் நடுவரிசை ஓவர்களில் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதனால் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக பேட் செய்வது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் திறனை சோதிக்கும் விதமாக அமையும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now