
Indian Squad Set To Tour England With Families Tomorrow (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மே 15ஆம் தேதி முதல் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாளைய தினம் இந்திய அணி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளது. அங்கு அவர்கள் மேலும் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் பயிற்சிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.