
indian-team-announced-for-wtc-final-against-new-zealand-no-mayank-and-kl-rahul (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது. இதையடுத்து 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்து, பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அவர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிகான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், சர்தூல் தாக்கூர், அக்சர் படேல் உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை.