
Indian team has arrived in UK, They will now undergo 3 days of Hard Quarantine (Image Source: Google)
இங்கிலாந்து மண்ணில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இதற்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமையில் இருந்தனர். நேற்று, வரலாற்றில் முதன் முறையாக இரு அணியும் இணைந்து, மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்து கிளம்பினர்.
அதன்படி இன்று இரு அணியும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.