
Indian Team Reaches Nottingham Ahead Of Test Series Against England (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த வாரம் கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலவாது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தெதி நாட்டிங்ஹாமிலுள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி இன்று நாட்டிங்ஹாம் சென்றடைந்தது.
முன்னதாக இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.