முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார் - தினேஷ் கார்த்திக்!
சத்தியமாக சொல்கிறேன் நிச்சயம் இந்த போட்டியில் முகமது ஷமி விளையாடியிருந்தால் விரைவாகவே சில விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான தொடக்கத்தை அளித்து இருப்பார் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது கேஎல் ராகுலின் சதம் காரணமாக 245 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் 408 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
Trending
மேலும் தற்போதே இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்க அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தத்தளித்து வருகிறது. இதனால் தென் ஆப்பிரிக்க அணியே இந்த போட்டியில் வெற்றிபெறுவதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இப்படி ஒரு சரிவை சந்திப்பதற்கு காரணம் இந்திய அணியின் சற்று சுமாரான பந்துவீச்சு தான் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிலும் பும்ரா மற்றும் சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரது பந்துவீச்சு மோசமாக இருந்து வருவதாகவும் பலரும் வெளிப்படையாகவே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் தற்போதைய டெஸ்ட் அணி முகமது ஷமியை மிகவும் தவற விடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இதுபோன்ற வேகத்திற்கு சாதகமாக இருக்கும் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் சீம் பிடித்து பந்துவீசும் முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார்.
சத்தியமாக சொல்கிறேன் நிச்சயம் இந்த போட்டியில் அவர் விளையாடியிருந்தால் விரைவாகவே சில விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான தொடக்கத்தை அளித்து இருப்பார். இந்திய அணி தற்போதைய நிலையில் அவரை மிகவும் தவற விடுவதாகவே நினைக்கிறேன். அதே வேளையில் பும்ரா மற்றும் சிராஜ் சிறப்பாக வீசுகிறார்கள். இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருந்து ரன்களை அதிகமாக கொடுப்பதாகவே தான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now