
Indians beat Derbyshire by 7 wickets (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பும்ரா தலைமையிலான மெயின் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து கவுண்டி அணியுடன் இரண்டு பயிற்சி டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற டெர்பிஷையர் அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷையர் அணியின் தொடக்க வீரர் ரீஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் மசூத் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த மேட்சன் 28, லுஸ் 9, கேட்ரைட் 27, ப்ரூக் கெஸ்ட் 23, அலெக்ஸ் ஹூக்ஸ் 24 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.